[Image source : Twitter/@RuchiraC]
டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகி பிரியங்கா காந்தி நேரில் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளார்.
டெல்லில் ஜந்தர் மாந்தர் எனும் இடத்தில் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்திய மல்யுத்த வீரர்கள் சம்மேள தலைவராக பிரிஜ் புஷன் சரண்சிங் தான் பதவியில் இருக்கிறார். இவர் பாஜகவை சேர்ந்த உத்தர பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வருவதாக கூறி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியும் வீராங்கனைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் அபினவ் பிந்த்ரா போன்ற வீரர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். தற்போது மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகி பிரியங்கா காந்தி , மல்யுத்த வீராங்கனைகளை சந்தித்து தங்கள் ஆத்தாவை தெரிவித்துவிட்டு வந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட எம்பி சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…