டெல்லியில் பீட்சா டெலிவரி செய்யும் நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தெற்கு டெல்லியில் மால்வியா நகர் பகுதியில் உள்ள 19 வயதான பீட்சா டெலிவரி நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதாக அம்மாவட்ட ஆட்சியர் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக அவருடன் பணிபுரியும் 16 நபர்களை கடையில் தனிமைப்படுத்த முடிவு செய்தனர். மேலும் கடையின் மூலம் உணவு வழங்கப்பட்ட ஒவ்வொரு வீட்டையும் அடையாளம் காணும் பணி தற்போது நடந்து வருகிறது.
அந்த வகையில் பீட்சா டெலிவரி செய்யப்பட்ட 72 குடும்பங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும், சுய தனிமைப்படுத்தப்பட்டன. அந்த பீட்சா நபர் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை பணியில் இருந்து பீட்சாக்களை வீடுகளுக்கு வழங்கியுள்ளார். பின்னர் கடந்த 15 நாட்களில் அந்த நபர் தெற்கு டெல்லி பகுதிகளான ஹவுஸ் காஸ், மால்வியா நகர் மற்றும் சாவித்ரி நகர் போன்ற பகுதிகளில் சுமார் 72 குடும்பங்களுக்கு பீட்சா டெலிவரி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. டெலிவரி நபருக்கு ஏற்பட்ட தொற்றால் அந்த குடும்பங்களை தனிமைப்படுத்தப்பட்டன.
மேலும் டெலிவரி செய்யும் நபர்கள் அனைவரும் முககவசங்களைப் பயன்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும் தெரிவித்துள்ளதால், மக்கள் பீதி அடையத் தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். ஆனால் அனைத்து தொடர்பு நபர்களையும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பும் முடிவு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிக்கப்பட்ட பீட்சா டெலிவரி நபர் இப்போது ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே நேரத்தில் அவரது தொடர்பில் இருந்து வந்த மற்றவர்கள் தினசரி அடிப்படையில் கண்காணிக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…