ஒடிசா மருத்துவமனையில் கழிப்பறையின் அருகே நிர்வாணமாக படுத்திருக்கும் கொரோனா நோயாளி.
பாரிபாடா நகரமான மயூர்பஞ்சில் வசிக்கும் பிபுதுத்தா டாஷ் என்பவர், மே 22 அன்று பாரிபடாவில் உள்ள மருத்துவமனையில் அவரது உறவினரை அனுமதித்துள்ளார். இதுகுறித்து கூறுகையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பாரிபடா நகரத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாங்கிசோலில் உள்ள மற்றொரு கோவிட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மே 23 அன்று நண்பகலில், எனது உறவினரின் மரணம் குறித்து எனக்குத் தெரிவிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்த மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்கு நடக்கும் அவலங்கள் குறித்த வீடியோ இணையத்தில் வெளியானது. இதுகுறித்து டாஷ் என்பவர் கூறுகையில், ‘வீடியோவில் எனது உறவினர் படுக்கையில் உட்கார்ந்து இருப்பதை கண்டேன். அதில் போர்வை மற்றும் தலையணை இல்லை. அவர் ஒரு துண்டு மட்டும் அணிந்து இருந்தார். அவர்களில் சிலர் கழிப்பறைக்கு முன்னால் தூங்குகின்றனர். வார்டில் சில ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன.
ஆனால் அவற்றை இயக்க அங்கு யாரும் இல்லை. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசாங்கம் பெரும் தொகையை செலவிடுகிறது. ஆனால் எல்லா பணமும் எங்கே போகிறது..? யாருக்கு…?’ என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக எம்எல்ஏ பிரகாஷ் சேரன் இதுகுறித்து கூறுகையில், ஆக்சிஜன் ஆதரவு இல்லாத நிலையில் பல நோயாளிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். நோயாளிகள் என்ன தேவை என்பதை மருத்துவர்கள் புரிந்துகொள்ளவில்லை. செவிலியர்கள் தொற்றுநோய்க்கு பயந்து அவர்களுடன் நெருங்கி வருவதில்லை. நிலைமை என்னவென்றால் நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவு கூட கிடைப்பதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மருத்துவ ஊழியர்களின் அலட்சியம் காரணமாக தெங்கனல் மாவட்ட தலைமையக மருத்துவமனையின் அவலங்கள் தொடர்பாக, ஜூன் 30 ம் தேதி ஒடிசா சுகாதார செயலாளருக்கு ஆஜராகுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…