தலைநகரில் தாண்டவமாடும் கொரோனா.! ஒரே நாளில் 3000 பேருக்கு தொற்று உறுதி.!

Published by
மணிகண்டன்

டெல்லியில் இன்று ஒரே நாளில் 3000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 59,746ஆக உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாகிகொண்டே வருகிறது. இதுவரை அங்கு 59 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இன்று ஒரே நாளில் 3000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 59,746ஆக உள்ளது. அதேபோல இன்று மட்டுமே 63 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 2175ஆக உயர்ந்தது.

இதில் சிறிய நற்செய்தி என்னவென்றால் 1719 பேர் இன்று கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரையில் 33,013  பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்துவருவதால் அதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

Published by
மணிகண்டன்

Recent Posts

அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம்.!

அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…

2 minutes ago

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

1 hour ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

2 hours ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

2 hours ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

3 hours ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

4 hours ago