சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்காத ஒரு கொரோனா நோயாளியால் 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமாக தன் பரவிக்கொண்டிருக்கிறது. தினமும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்து கொண்டே இருக்கின்றனர். இந்த கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்தாலும், முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றி இருப்பதுமே முற்றிலும் கொரோனாவை அழிப்பதற்கான வழி என அறிவுறுத்தப்பட்டு கொண்டே இருக்கிறது. இருப்பினும் பலர் அலட்சியமாக தான் தற்பொழுதும் இருக்கின்றனர்.
இந்நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றாததால் எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர்கள் லால் அகர்வால் அவரகள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ஒரு கொரோனா நோயாளி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வெளியில் செல்லும் பொழுது அவர் மூலமாக 30 நாட்களில் 406 பேருக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளார். அதே நோயாளி வெளியில் செல்வது 50% ஆவது குறைக்கும் பொழுது 30 நாட்களில் வெறும் 15 பேருக்கு தான் பரவும் என தெரிவித்துள்ளார்.
மேலும், அதே நோயாளி 75% வெளியில் செல்வதை குறைத்து, பிறர் உடனான தொடர்பை குறைத்துக் கொள்ளும் பொழுது 30 நாட்களில் இரண்டு பேருக்கு தான் கொரோனா பரவும் அபாயம் உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளார். அதுபோல மாஸ்க் அணிவதாலும் கொரோனா முற்றிலும் ஒழிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். ஏனென்றால் கொரோனா உள்ளவர்கள் மாஸ்க் அணிந்து இருந்தாலும் 10% தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும், ஆனால் அனைவருமே மாஸ்க் அணிந்து செல்லும் பொழுது கொரோனா பரவுவதற்கான வாய்ப்பு மிக குறைவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…