இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,629 பேருக்கு கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைளை பொதுமக்கள்கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் 9,629 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 6,934 ஆக குறைந்திருந்த கொரோனா தொற்று இன்று 9,629 ஆக சற்று அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 63,380 லிருந்து 61,013 ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், பலி எண்ணிக்கை 5,31,369 லிருந்து 5,31,398 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,43,11,078 லிருந்து 4,43,23,045 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 220,66,50,086 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 5,407 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இன் இறுதிப் போட்டி ஜூன் 11 முதல் 15 வரை நடைபெற…
லண்டன் : நாளை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி,…
சென்னை : விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் என்பது மும்மரமாக நடைபெற்று…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் லேசானது…
மெரிட் தீவு : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் மிஷன் 4 (Ax-4) இன் மூலம் சர்வதேச விண்வெளி…
சென்னை : தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 19.260 பணியிடங்கள் 18…