விண்வெளிக்கு செல்லும் சுபான்ஷு சுக்லா! கொண்டு செல்லும் உணவுகள் என்னென்ன தெரியுமா?
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பருப்பு அல்வா உள்ளிட்ட உணவுகளை விண்வெளிக்கு எடுத்து செல்லவிருக்கிறார்.

மெரிட் தீவு : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் மிஷன் 4 (Ax-4) இன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நாளை செல்லவிருக்கிறார். முன்னதாக இவர் மே மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், அதன்பிறகு ஜூன் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக ஏவுதல் ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்றும் நடைபெறவிருந்த மோசமான வானிலை காரணமாக அதன் ஏவுதல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இறுதியாக நாளை ஜூன் 11 மாலை 5.30 மணிக்கு சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் மிஷன் 4 (Ax-4) இன் மூலம் அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து (Kennedy Space Center, புளோரிடா) விண்வெளைக்கு செல்லவிருக்கிறார். அவர் ஸ்பேஸ்X (SpaceX) நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மற்றும் க்ரூ டிராகன் விண்கலம் (Crew Dragon spacecraft) மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) பயணம் செல்ல இருக்கிறார்.
இந்நிலையில், இங்கிருந்து செல்லும்போது சுபன்ஷு சுக்லா என்னென்ன உணவுகளை எடுத்து செல்லப்போகிறார் என்கிற தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, அவர் தன்னுடன் பாரம்பரிய இந்திய உணவுகளை எடுத்துச் செல்கிறார், இவை இஸ்ரோ (ISRO) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆல் தயாரிக்கப்பட்டவை.
அந்த உணவுகள் என்னவென்றால், மூங் தால் அல்வா (Moong Dal Halwa), கேரட் அல்வா (Gajar ka Halwa), ஆம்ராஸ் (Aamras – மாம்பழ நெக்டார்), இட்லி (Idli), பிரியாணி (Biryani), வகை வகையான அரிசி உணவுகள் (Varieties of rice dishes) ஆகிய உணவுகளை தான் எடுத்துச்செல்லவிருக்கிறார்.
மேலும், இந்த உணவுகள் நாசாவின் ஒப்புதலுடன் தயாரிக்கப்பட்டவை மற்றும் விண்வெளியில் 14 நாள் பயணத்திற்கு ஏற்றவாறு உலரவைக்கப்பட்ட (freeze-dried) வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, உணவு கெட்டுப்போக வாய்ப்புகள் இல்லை. அதே சமயம் சுபான்ஷு சுக்லாவுக்கு நாசாவின் சர்வதேச உணவு மெனுவிலிருந்து தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு உள்ளது. மேலே கூறப்பட்டுள்ள இந்த உணவுகள் அவருக்கு “வீட்டு உணவு” (ghar ka khana) உணர்வை அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டவை என்பதாலும் இந்த உணவுகளை அவர் விண்வெளிக்கு எடுத்து செல்லவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.