டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி பயணத் திட்டத்தின்படி பிறநாட்டு விண்வெளி வீரர்கள் 3 பேருடன் சுக்லாவும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்கிறார். இதன்மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் இந்தியர், விண்வெளிக்கு செல்லும் 2-வது இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார். பணி 6 முறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, சுப்ன்ஷு சுக்லா இறுதியாக புறப்பட்டார். அவரது ஆக்சியம்-4 பணி வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. […]
மெரிட் தீவு : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் மிஷன் 4 (Ax-4) இன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நாளை செல்லவிருக்கிறார். முன்னதாக இவர் மே மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், அதன்பிறகு ஜூன் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக ஏவுதல் ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்றும் நடைபெறவிருந்த மோசமான வானிலை காரணமாக அதன் ஏவுதல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட […]
டெல்லி : ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 திட்டத்தின் கீழ், இந்தியா, அமெரிக்கா, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) அனுப்ப உள்ளது. இந்த பணி அமெரிக்காவின் விண்வெளி பயண நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் நாசாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர, எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் இந்த பணியில் முக்கிய பங்கு வகிக்கும். இருப்பினும், இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை […]
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ககன்யான் பணிக்கான ‘முதன்மை’ விண்வெளி வீரராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப் கேப்டனும் இந்திய விமானப்படை (IAF) அதிகாரியுமான சுபன்ஷு சுக்லா, இந்த ஆண்டு மே மாதம் நாசாவின் ஆக்சியம் மிஷன் 4 குழுவினருடன் சர்வேதேச விண்வெளிக்குச் செல்வார். அமெரிக்க விண்வெளி நிறுவனத்தின் கூற்றுப்படி, மே 2025 க்கு முன்பு ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் குழுவினர் விண்வெளி நிலையத்திற்கு புறப்பட மாட்டார்கள். மேலும், குழுவினர் 14 நாட்கள் சுற்றுப்பாதை […]
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா விண்வெளி நிலையத்தில் இருந்து போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் கடந்த ஜூன் மாதம் விண்ணிற்கு சென்றார். 8 நாள் பயணம் என்று தான் இந்த விண்வெளி பயணம் தொடங்கியது. ஆனால் 160 நாட்கள் கடந்தும் இன்னும் பூமிக்கு திரும்பாமல் விண்வெளியில் இருக்கிறார்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர். இவர்கள் இருவரும் எப்போது பூமிக்கு திரும்பி […]
வாஷிங்க்டன் : கடந்த 5 மாதங்களாகச் சர்வதேச விண்வெளியிலிருந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார் சுனிதா வில்லியம்ஸ். சாதாரண ஒரு சோதனைக்காக விண்வெளி சென்ற இவர், திரும்பப் பூமிக்கு வர முடியாமல் விண்வெளியில் சிக்கி உள்ளார். மேலும், அதோடு தற்போது அடுத்தகட்ட ஆய்வையும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், உலகம் முழுவதும் நாளை மறுநாள் (அக்-31, வியாழக்கிழமை) தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையாகப் பார்க்கப்படும் இது, உலகம் முழுவதும் பரவி உள்ள ஹிந்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு […]
China: சீனா தனக்கென சொந்தமாக உருவாக்கியுள்ள விண்வெளி நிலையத்திற்கு 3 விண்வெளி வீரர்களை 6 மாத பணிக்காக அனுப்பியுள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக ரஷ்யா உட்பட உலக நாடுகள் கூட்டாக இணைந்து சர்வதேச விண்வெளி மையத்தை ஏற்கனவே நிறுவியுள்ள நிலையில், அதன் ஆயுட்காலம் வரும் 2030ல் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் சீனா ஒரு பயங்கரமான முயற்சியை மேற்கொண்டு தனக்கென சொந்தமான ஒரு தனி விண்வெளி நிலையத்தை விண்ணில் உருவாக்கி உள்ளது. சீனா உருவாக்கியுள்ள இந்த […]
முதன்முறையாக ரஷ்ய திரைப்படம் ஒன்று சர்வதேச விண்வெளி மையத்தில் படப்பிடிப்பை தொடங்கியுள்ளது. ரஷ்ய திரைப்படமான ‘தி சேலஞ்’ என்ற திரைப்படத்தை பிரபல ரஷ்ய இயக்குநர் க்ளிம் ஷிபென்கோ இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் கதையில் விண்வெளியில் அதிகம் இருப்பது போன்ற காட்சிகள் இருக்கும். அதனால் முதன்முறையாக உலக வரலாற்றில் சர்வதேச விண்வெளி மையத்திலேயே படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். சோயூஸ் எம்.எஸ்-19 ராக்கெட் மூலம் விண்வெளி வீரர் ஆன்டன் ஷ்கேப்லெரோவ், இப்படத்தின் இயக்குநர் க்ளிம் ஷிபென்கோ, நடிகை யுலியா பெரெஸில்ட் […]