கேரள மாநிலம் ஆலப்புழாவில் கொரோனா வார்டில் நடைபெற்ற திருமணம்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொரோனா வைரஸ் நாட்டையே மாற்றி போட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த தொற்று பரவலால் நாட்டில் வித்தியாசமான சம்பவங்கள் பல இடங்களில் நடைபெறுகிறது.
அந்த வகையில் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் சரத்குமார். இவருக்கு வயது 28. கத்தாரில் பணியாற்றி வந்த இவர் ஆலப்புழாவை சேர்ந்த அபிராமி என்னும் பெண்ணுடன் பல மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கொரோனா காரணமாக தாய்நாடு திரும்ப முடியாத சரத், கடந்த மாதம் இந்தியா வந்தார்.
இந்நிலையில் ஏப்ரல் 25ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற முடிவான நிலையில், சரத் குமாருக்கும், அவரது தாயார் ஜீஜி-க்கும் எதிர்பாராதவிதமாக கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 21-ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரியில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். மேலும் நிச்சயிக்கப்பட்ட தேதியில் திருமணம் நடைபெற வேண்டும், தள்ளிப் போக கூடாது என்பதற்காக இருவீட்டாரும் கலந்து ஆலோசித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கொரோனா வார்டிலேயே திருமணத்தை நடத்த அனுமதி பெற்றனர்.
இதனையடுத்து, முழு கவச உடை அணிந்து அபிராமி கொரோன வார்டில், சரத்தின் தயார் மாலை எடுத்து கொடுக்க, இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின் கொரோனா வார்டில் இருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…