இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் விளைவு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1834 லிருந்து 1965 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 41 லிருந்து 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸிலிருந்து 150 பேர் குணடமடைந்து உள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அதிகமாக பரவி இருக்கும் மாநிலம் மகாராஷ்டிரா 335, கேரளா 265, தமிழ்நாடு 234, டெல்லி 152, உத்தரபிரதேசம் 113, கர்நாடகா 110 என அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உலகை மிரட்டி வரும் கொரோனா வைரசால் அனைத்து நாடுகளும் வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 935,957 ஆக அதிகரித்து, பலியின் எண்ணிக்கை 47,245 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 194,286 பேர் குணமடைந்துள்ளனர் என உலக சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…