கொரோனா வைரஸ் தொற்றை உலகில் பரப்பி மனித குலத்திற்கு எதிரான செயலில் ஈடுபட்டு பயங்கரமான குற்றம் புரிந்த சீனாவுக்கு ஐநா மனித உரிமை ஆணையம் கடும் அபராதம் விதிக்க வேண்டும், என சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து லண்டனை தலைமையிடமாக கொண்ட சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டார், இதில், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சீன அரசின் செயலற்ற தன்மையால் இன்று உலகமே பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் நோயால் பாதித்தும், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தும் வருகின்றனர்.
கோடிக்கணக்கான பண இழப்பும், இந்தியா உள்ளிட்ட இதர நாடுகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வைரஸ் சீனாவின் அனைத்து மாகாணங்களுக்கும் பரவாத நிலையில், இந்த வைரஸ், உலகில் அனைத்து நாடுகளுக்கு மட்டும் பரவுவது மட்டும் இன்னும் பெரிய மர்மமாகவே உள்ளது. உலகம் முழுவதும் 60 ஆயிரம் பேரை பலி கொண்ட இந்த வைரஸ் பரவ, சீன ராணுவமும் வுகான் நகரமும்தான் காரணம். எனவே, இந்த விஷயத்தில் ஐநா மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டும். ஒட்டு மொத்த உலகுக்கும் குறிப்பாக இந்தியாவுக்கும் இழப்பீடு தொகையை சீனா செலுத்த மனித உரிமை ஆணையம் உத்தரவிட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்,
மேலும், சீனா உலகின் மிகப்பெரிய வல்லரசாக தன்னை நிலைநிறுத்தவும், ‘பயோவார்’ எனப்படும் உயிரி போர் மூலம் மற்ற நாடுகளை கட்டுப்படுத்தவும் நினைக்கிறது, கொரோனா ஒரு தொற்றுநோய் அல்ல என ஆரம்பகட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தையே சீனா தவறாக வழிநடத்தி உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தையும், இதர உலக நாடுகளையும் எச்சரிப்பததில் சீன அரசும் அதன் அதிகாரிகளும் தோல்வி அடைந்துள்ளனர். இதில் அனைத்து சட்ட விதிகளையும் மீறிய சீனா வெளிப்படையாக தகவல்களை வெளியிடாமல் மனித உரிமையைய்யும் மீறி உள்ளது. எனவே சீனா மனித குலத்துக்கு எதிராக மிகப்பெரிய பயங்கர குற்றத்தை இழைத்துள்ளது. இதற்காக உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் 25(1)வது பிரிவின் கீழ் சீனாவுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், பாகிஸ்தான் தரப்பில், விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என பாகிஸ்தான் எம்பி ரஹ்மான் மாலிக், ஐநா பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டரசுக்கு எழுதிய கடிதத்தில், ‘கொரோனா வைரஸ் இயற்கையிலே உருவானதா? அல்லது பயோலாஜிக்கல் வார் போல மனிதனால் உருவாக்கப்பட்டதா?, அதன் பிறப்பிடம் எது என்பது குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும்,’ என வலியுறுத்தி உள்ளார். தற்போது உலக நாடுகள் சீனாவிற்கு எதிராக சாட்டையை சுழற்ற தொடங்கியுள்ளனர்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…