ஊரடங்கு நீட்டிப்பு: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!

Published by
பாலா கலியமூர்த்தி
நாடு முழுவதும் கொரோனாவை தடுப்பற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்திருந்தார். இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். மேலும், ஏப்ரல் 20-க்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்கும் என்று மோடி குறிப்பிட்டிருந்தார். அதன்படி ஏப்ரல் 20 க்கு பிறகு நடைமுறைப்படுத்தும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 20க்கு பிறகு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் :
  • ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி.
  • ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சுவேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் செயல்பட அனுமதி.
  • ஏப்ரல் 20க்கு பின் ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் மாஸ்க் கட்ட்டயம் அணிய வேண்டும்.
  • ஏப்ரல் 20இல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்; ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • மே 3 ஆம் தேதி வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு தடை தொடரும்.
  • கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கலாம் என மத்திய அரசு உத்தரவு.
  • மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்து தடை தொடரும்.
  • நாடு முழுவதும் பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம்.
  • ஏப்ரல் 20ஆம் தேதி முதல் சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம்.
  • முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற அனுமதி.
  • ஏப்ரல் 20 முதல் மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பால் நிலையங்கள், இறைச்சிக்கடைகள் செயல்பட அனுமதி.
  • விவசாயம் சார்ந்த இயந்திரங்கள் பழுது நீக்கும் நிறுவனங்களுக்கு அனுமதி.
  • ஏப்.20 முதல் அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர் மையங்களை திறக்கலாம்.
  • ஏப்ரல் 20 முதல் கிராமப் பகுதிகள், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள ஆலைகள் சமூக இடைவெளியுடன் இயங்கலாம்.
  • ராணுவ வீரர்கள் பயணிக்க மற்றும் முக்கிய பயணிகளுக்காக குறிப்பிட்ட ரயில் சேவை அனுமதி.
  • கனரக வாகன பழுதுபார்ப்பு கடைகளை திறக்க அனுமதி.
  • மருந்து பொருட்கள், மருந்து உபகரணங்கள் கொண்டு செல்ல மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் விமான சேவைக்கு அனுமதி.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரயில்வே துறை அறிவித்த ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

ரயில்வே துறை அறிவித்த ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல்…

39 seconds ago

திருப்புவனம் இளைஞர் மரணம் : “தப்ப முயன்றபோது வலிப்பு”… FIR-ல் அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை :  மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

18 minutes ago

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

9 hours ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

10 hours ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

11 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

11 hours ago