“ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறப்பது இனப்படுகொலைக்குச் சமம்”- அலகாபாத் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்..!

Published by
Edison

ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் இறப்பது இனப்படுகொலைக்குச் சமமாகக் கருதப்படும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இதனால்,கொரோனா காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டுகிறது.ஏனெனில்,கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இறப்பதை விட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் முறையான சிகிச்சை கிடைக்காமல் இறப்பவர்களே அதிகமாக உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள  மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக சமூக ஆர்வலர்கள் சிலரால் பல்வேறு பொதுநல வழக்குகள் போடப்பட்டன.

இந்த வழக்கை செவ்வாய்க்கிழமையன்று விசாரித்த அலகாபாத் நீதிமன்ற நீதிபதிகள் அஜித்குமார் மற்றும் சித்தார்த் வர்மா ஆகியோர், “மருத்துவமனைகளுக்கு  தேவைப்படும் ஆக்ஸிஜனை கொடுக்காமல் இருப்பது ஒரு குற்றச் செயலாகும். மேலும்,ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் இறப்பது  ஒரு ‘இனப்படுகொலைக்கு சமமாகக்’ கருதப்படும்.

ஏனெனில்,விஞ்ஞானம் மிகவும் முன்னேறியிருக்கும் போது, இந்த நாட்களில் இதய மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மூளை அறுவை சிகிச்சை கூட உடனடியாக நடைபெறுகையில்,ஆக்சிஜன் இல்லாமல் மக்களை எப்படி இறக்க அனுமதிக்க முடியும்.

எனவே,ஆக்சிஜன் கொடுக்கும் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளும் மற்றும் அரசு நிர்வாகமும்  இதற்கு பொறுப்பேற்றுக் கொண்டு ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு எதிராக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்”,என்று உத்தரவிட்டுள்ளனர்.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

14 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago