டெல்லி தாக்குதல் ..! நேரில் சென்ற உதயநிதி ஸ்டாலின்

Published by
Venu
  • டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
  • ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ஆயிஸ் கோஷை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.

கடந்த 5-ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்   ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.அப்போது திடீரென முகத்தை மறைத்துக்கொண்டு  பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த மர்ம நபர்கள் ஹாக்கி மட்டைகள், இரும்பு கம்பிகள் போன்ற ஆயுதங்களால் கண்ணில் பட்ட அனைத்து பொருள்களையும் மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரையும்  தாக்கினர்.

இந்த தாக்குதலில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ஆயிஸ் கோஷ் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் காயமடைந்து அனைவரும்  எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்  வீடு திரும்பினர். அப்போது, ஆயிஸ் கோஷ் கூறுகையில் ,இந்த கொடூர தாக்குதலுக்கு பாஜக மாணவரணியான (ஏ.பி.வி.பி.) காரணம் என குற்றம் சாட்டினார்.இந்த தாக்குதலுக்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கல்லூரி மாணவர்கள் பல இடங்களில் போராட்டம் நடத்தினர்.  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்து ரக்‌ஷா தளம் என்ற அமைப்பு பொறுப்பேற்றது.

இந்நிலையில் இன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ஆயிஸ் கோஷை  தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். தி.மு.க எம்.பி.கலாநிதி வீராசாமி, எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் உடன் சென்றுள்ளனர்.

Recent Posts

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

24 minutes ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

55 minutes ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

3 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

4 hours ago