ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் ஆவணங்களை ஒப்படைக்க டெல்லி நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தரப்புக்கு குற்றப்பத்திரிகையுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஒப்படைக்குமாறு டெல்லி நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டது.

கடந்த 2007-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டிலிருந்து ரூ.305 கோடி முதலீடு வருவதற்கு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் வரும் அந்நிய முதலீட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் உதவினார் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் இதை சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தியது.

அதன்பின் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரம், சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தரப்புக்கு குற்றப்பத்திரிகையுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஒப்படைக்குமாறு டெல்லி நீதிமன்றம் நீதிபதி அஜய் குமார் குஹர் சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

21 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

24 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago