70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை 22 மையங்களில் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்று புதிய உச்சத்தை நெருங்குகிறது. பாஜக 08 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மற்ற காட்சிகள் இதுவரை ஒரு தொகுதியிலும் கூட முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே ஆம் ஆத்மி கட்சி முதல்வர் தொடர்ந்து டெல்லி தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். இதைத்தொடர்ந்து டெல்லி பட்பர்கஞ் தொகுதியில் பாஜகவின் ரவீந்திர சிங் நேகியை விட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா 656 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை தற்போது ஒரு சில இடங்களில் அறிவித்து வருகிறது தேர்தல் ஆணையம். இந்நிலையில் ஆம் ஆத்மி 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க உள்ளதால் டெல்லி மாநிலத்தின் நடப்பு சட்டப்பேரவையை கலைத்து துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…