மகாராஷ்டிரா மாநிலத்தில் இனி பெண் காவலர்கள் 12 மணி நேரத்திற்கு பதிலாக 8 மணி நேரம் மட்டும் பணியில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் பெண் காவலர்களுக்கு நற் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பெண் காவலர்களின் பணி நேரத்தை அரசு குறைத்துள்ளது. மகாராஷ்டிர மாநில டிஜிபி சஞ்சய் பாண்டே பிறப்பித்த உத்தரவின்படி, பெண் காவலர்கள் இனி 12 மணி நேரத்திற்குப் பதிலாக எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.
பெண் காவலர்களுக்கான புதிய குறுகிய வேலை நாள் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படும் எனவும் மகாராஷ்டிராவில் தற்போது ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு பணி நேரம் 12 நேரமாக உள்ளது. இந்நிலையில், இனிமேல் மகாராஷ்டிராவில் பெண் காவலர்களுக்கு பணி நேரம் 12 மணி நேரத்திற்கு பதிலாக 8 மணி நேரம் மட்டும் பணியில் இருக்க வேண்டும் என அம்மாநில டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மறு உத்தரவு வரும் வரை பெண்களுக்கு எட்டு மணி நேரப் பணி அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் நாக்பூர், அமராவதி நகரங்கள் மற்றும் புனே கிராம புறங்களில் இந்த திட்டம் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் அவசர காலங்களில் பெண் காவலர்களின் பணி நேரத்தை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…