சூடானில் இருந்து திரும்பிய ஒரு சிப்பாயிடம் மலேரியாவின் புதிய இனமான பிளாஸ்மோடியம் ஓவலே கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் ஒரு அரிய மலேரியா இனம் பதிவாகியுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் சைலஜா அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சூடானில் இருந்து திரும்பிய ஒரு சிப்பாயிடம் மலேரியாவின் புதிய இனமான பிளாஸ்மோடியம் ஓவலே கண்டறியப்பட்டது. இந்த சிப்பாய் தற்போது கண்ணூரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார்.
பிளாஸ்மோடியம் ஓவலே என்பது மனிதர்களை பாதிக்கும் நான்கு வகையான மலேரியாக்களில் ஒன்று. இது முதன்மையானது. ஆப்பிரிக்க பகுதிகளில் இது அதிகமாக காணப்படுகிறது. ஆனால், மேற்கு பசிபிக், பிலிப்பைன்ஸ் மற்றும் நியூகினியா தீவுகளில் இது பதிவாகி உள்ளது. இது ஒரு ஆபத்தான மலேரியா இனமாகும்.
மலேரியாவின் புதிய இனமான பிளாஸ்மோடியம் ஓவலே மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது. சூடானில் இருந்து வந்தா சிப்பாயிடம் இது கண்டறியப்பட்டுள்ளது. கண்ணூரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சரியான நேரத்தில் சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் நோய் பரவுவதை தவிர்க்கலாம் என, மாநில சுகாதார அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…