அவகாசம் தராமல் விவாகரத்து.. உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் – நீதிபதிகள் தீர்ப்பு!

supreme court

மீளவே முடியாத மண முறிவு என்ற அடிப்படையில் 6 மாதம் அவகாசம் வழங்காமல் விவாகரத்து வழங்க முடியும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

ஆறு மாதம் அவகாசம் தாராமலேயே ஒரு ஜோடியின் திருமணத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி 6 மாதம் அவகாசம் வழங்காமலேயே திருமணத்தை ரத்து செய்ய, அதாவது விவாகரத்து வழங்க முடியும் என்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

விவாகரத்து தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. எனினும், பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்ய ஆறு மாதங்கள் கட்டாய காத்திருப்பு காலத்தை, தேவைக்கு உட்பட்டு ரத்து செய்யலாம் என்றும் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்