மீண்டும் தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்வானார் தேனாண்டாள் முரளி!

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக இரண்டாவது முறையாக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தேர்வு.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் நேற்று சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் தலைமையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வந்த நிலையில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றுள்ளார். சங்க தேர்தலில் தயாரிப்பாளர் நலம் காக்கும் அணி சார்பில் போட்டியிட்ட முரளி வெற்றி பெற்றுள்ளார்.
ஏற்கனவே தயாரிப்பாளர் சங்க தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி பதவி வகித்து வந்த நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக தேர்வாகியுள்ளார். இதுபோன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொருளாளராக முரளி அணியை சேர்ந்த சந்திரபிரகாஷ் ஜெயினும் வெற்றி பெற்றுள்ளார்.