யார் நினைவாக ஹோலி கொண்டாட கொண்டாடுகிறோம் தெரியுமா உங்களுக்கு…?

Published by
murugan

 ஹோலி அல்லது அரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் இந்து மக்கள் வாழும் நாடுகளிலும் இந்த பண்டிகை கொண்டப்படுகிறது. 

இந்த முக்கிய நாளில் மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக்கொண்டு கொண்டாடுகின்றனர். அந்த நாளுக்கு முன்னதாக பெரிய நெருப்புகளை மூட்டுவார்கள். இது ஹோலிகா தகனம் அல்லது சோட்டி ஹோலி எனவும் அழைக்கப்படும்.

ஹோலிப் பண்டிகை குளிர் காலத்தின் இறுதியில் பங்குனி (பிப்ரவரி ,மார்ச்) மாதத்தின் கடைசி முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகின்றது.

ஹோலி கொண்டாட காரணம் இதுதான்:

 இரண்யகசிபு என்ற  அரசன் இருந்தான். இவனுக்கு பிரம்மா தந்த வரத்தால் இவனை யாராலும் கொல்ல முடியவில்லை. அந்த வரம் இவனது பெருந்தவத்தால் கிடைத்தது. இந்த வரத்தை கொண்டு இவனை இரவிலோ, பகலிலோ ,வீட்டிலோ, வெளியிலோ , மண்ணிலோ கொல்ல முடியாது.

இதனால் இவன் எந்த கடவுளைத் தொழாமல் தன்னை வழிபட வேண்டும் என ஆணையிட்டான்.இவனது மகன் பிரகலாதன் திருமாலின் பக்தன். இரண்யகசிபு பல தடவை அச்சுறுத்தியும், பிரகல்லாதன் திருமலை வழிபடுவதை விடவில்லை. பிரகல்லாதனுக்கு நஞ்சூட்டினாலும் அது அவன் வாயில் தேனாகியது. யானைகளால் தக்கியபோதும் காயமில்லாமல் தப்பினான்.

பாம்புகளுக்கு இடையில் பசியோடு பிரகல்லாதனை ஒரு அறையில் தனியாக அடைத்தபோதும் உயிரோடு இருந்தான். தன் மகனைக் கொல்ல இரண்யகசிபு எடுத்த அனைத்து  முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. பின்னர் பிரகல்லாதனை அவனது தங்கை (ஹோலிகா) மடியில் அமரச் செய்து தீயில் இருக்க ஆணையிட்டான்.

 அவள் தங்கை(ஹோலிகா) அணிந்துஇருந்த துப்பட்டா( மாயப் போர்வை) . பிரகல்லாதன் திருமாலை வழிபட தீப்பற்றி எரியத் தொடங்கியதும் தங்கையின் சால்வை பறந்து பரகல்லாதனை மூடிக்கொண்டது. இதனால் ஹோலிகா தீயில் இறந்தாள் பிரகல்லாதன் மட்டுமே தப்பித்தான் , இந்த  காட்சியைக் கண்டு மக்கள் வியந்தனர்.  ஓலிகா எரிந்த நிகழ்வே ஹோலியாகக் கொண்டாடப்படுகிறது.

Published by
murugan

Recent Posts

நெல்லை கொலை : பெற்றோர் தூண்டுதலில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை கொலை : பெற்றோர் தூண்டுதலில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…

11 minutes ago

சச்சினின் சாதனையை முறியடிப்பதில் கவனம் செலுத்த போவதில்லை – ஜோ ரூட் சொன்ன பதில்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…

39 minutes ago

AI பயன்படுத்த போறோம்…12,000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS?

மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…

2 hours ago

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : மக்களவையில் இன்று 16 மணி நேரம் விவாதம்!

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…

3 hours ago

தினமும் 10 மணி நேரம் நிறுத்திக்கொள்கிறோம்! காசாவில் கருணை காட்டிய இஸ்ரேல்!

ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…

3 hours ago