யூசுப் வீடு அருகே தெரு நாய் ஒன்று அடிக்கடி குரைத்து கொண்டு பெரும் சத்தத்தை ஏற்படுத்தியது. இதனால், எரிச்சல் அடைந்த யூசுப் அந்த நாயை அந்த பகுதியில் இருந்து துரத்த முயற்சி செய்தும், அந்த நாய் அந்த பகுதியில் இருந்து செல்லவில்லை. இதையடுத்து யூசுப் வேறு இடத்திற்கு கொண்டு விட முடிவு செய்தார்.
இந்நிலையில், அந்த நாயின் கழுத்தில் கயிற்றை கட்டி, பின்னர் அந்த கயிற்றை காரின் பின் பகுதியில் கட்டிக்கொண்டு காரை வேகமாக ஓட்டிச்சென்றார். யூசுப்பின் இந்த செயலை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பார்த்தார். முதலில் காரை நாய் துரத்திச் செல்வதாக நினைத்தார், அருகில் சென்று பார்த்தபோது நாயை காரில் கட்டி இருப்பது தெரியவந்தது.
இதை அந்த வழியாக சென்றவர்கள் தங்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். பின்னர், படுகாயங்களுடன் நாயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சமூக வலைத்தளங்களில் பரவிய காட்சியை வைத்து போலீசார் யூசுப் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…