வரும் 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் வரும் 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். இதனால் அனைத்து விமான நிலையங்களும் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு மாதங்கள் நாடு முழுவதும் உளநாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, நாடு முழுவதும் நான்காவது கட்ட ஊரடங்கு மே 31 வரை அமலில் இருக்கும் நிலையில், மருத்துவ உபகரணங்கள் மற்றும் வெளிநாட்டில் சிக்கி தவித்த இந்தியர்களை மீட்டு வருவதற்கு மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், வரும் 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என்று அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். விமானத்தில் பயணிக்கும் பயணிகள் உரிய பாதுகாப்பு மற்றும் தனிமனித இடைவெளி போன்றவைகள் பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…