கொரோனா வைரஸ் பரவுவதிலிருந்து தற்காத்துக்கொள்ள பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங்,கோமியம் குடிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்ட வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது அதிவேகமாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இதன்காரணமாக,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிகையானது 4 லட்சத்திற்கும் அதிகமாகியுள்ளது.இதனால்,பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு போடப்படும் ரெம்டெசிவெர் உள்ளிட்ட தடுப்பூசி மருந்துகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,உத்தரபிரதேசத்தின் பைரியாவைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.சுரேந்திர சிங்,கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள விரும்பினால் மக்கள் அனைவரும் பசுவின் கோமியம் குடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து சுரேந்திர சிங் வெளியிட்டுள்ள வீடியோவில்,”தினமும் காலை வெறும் வயிற்றில் பதஞ்சலியின் ‘கவ்முத்ரா’ என்ற பசு மாட்டின் கோமியத்தை தண்ணீரில் கலந்து இரண்டு அல்லது மூன்று டம்ளர் குடிக்க வேண்டும்.அதன்பின்னர் 30 நிமிடங்களுக்கு வேறு எதையும் உட்கொள்ள வேண்டாம்.இதனால்,கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.
அதுமட்டுமல்லாமல்,இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பசுவின் கோமியம் ஒரு சிறந்த நிவாரணி”,என்று கூறினார்.
இதனையடுத்து,சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…