‘ஃபேமிலி டாக்டர்’: ஆந்திர முதல்வரின் அடுத்த அசத்தல் திட்டம்.! வேற லெவல் பா..!

Default Image

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசு, பேமிலி டாக்டர் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் சமீபத்தில் ஆந்திராவில் ஏலூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மர்ம நோய் பரவி 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த மர்ம நோயால் பொதுமக்கள் இடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதுகுறித்த ஆய்வில் கிராம மக்கள் பயன்படுத்திய தண்ணீரில் ஈயம் போன்ற ரசாயனம் பொருள் கலந்துள்ளது என தெரியவந்தது. முதல்கட்ட தகவலில் ஈயம் கலந்திருப்பது உறுதியான நிலையில், கலப்படம் எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை தொடங்கியுள்ளது.

இதுபோன்று வரும் காலங்களில் நடந்துவிட கூடாது என்று கருத்தில் கொண்டு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசு, ஃபேமிலி டாக்டர் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மக்களின் வீடு தேடி சுகாதார வசதி சென்றடையும் நோக்கில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து பேசிய முதல்வர், கிராமங்களில் மருத்துவ வசதி இல்லாததை மக்கள் உணரக்கூடாது என்பதற்காக, மருத்துவர்கள் கிராமங்களுக்கு தவறாமல் வருவதை இந்தத் திட்டத்தின் கீழ் கட்டாயமாக்கப்படும்.

மேலும், ஒவ்வொரு மருத்துவருக்கும் கிராமங்கள் ஒதுக்கப்படும். ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு மாதத்திற்கு இரண்டு முறை மருத்துவர்கள் செல்லவேண்டும் என்பது கட்டாயம். இதனால் அனைத்து நோயாளிகளுக்கும் ஒரு குடும்ப மருத்துவரைப் போலவே கிராமங்களுக்குச் செல்லும் மருத்துவர்கள் இருப்பார்கள். பின்னர் நோயாளிக்கும், மருத்துவருக்கும் ஒரு புரிதல் இருக்கும். நோயாளிகளின் உடல்நிலை குறித்து சுகாதார அட்டையில் பதிவு செய்ய வேண்டும். இது பின்னாடி மிகவும் உதவும். `பேமிலி டாக்டர்’ திட்டத்துக்கு தேவையான உள்கட்டமைப்பை மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை வழங்க வேண்டும்.

அதனுடன், ஆம்புலன்ஸ், மருந்துகள் மற்றும் சிகிச்சைக்கு தேவையான பிற மருத்துவ உபகரணங்கள் போன்றவைகளை சேர்க்க உத்தரவிட்டுள்ளார். 2021-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் கிராம க்ளினிக்குகள் அமைக்கும் பணிகளை முடிக்கவும், மேலும், ஜனவரி இறுதிக்குள் ஒய்.எஸ்.ஆர் நகர சுகாதார க்ளினிக்குகளைத் தொடங்கவும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Kallazhagar 2025
Ganga Expressway IAF
pm modi - kerala port
Retro
ADMK Chief secretary Edappadi Palanisamy
Minister Anbil Mahesh