Categories: இந்தியா

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்…குடியரசு தலைவரை சந்திக்கும் விவசாயிகள் சங்கத்தினர்.!

Published by
கெளதம்

இந்திய மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகார் தொடர்பாக, குடியரசு தலைவரை சந்தித்து பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்களுக்கு நீதி கேட்க இருப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஏற்கனவே, மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் அளித்து அவரை கைது செய்ய வேண்டும் என பல நாட்களாக போராடி வருகின்றனர் மல்யுத்த வீராங்கனைகள். அந்த வகையில், புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அடுத்ததாக தங்கள் வாங்கிய பதக்கங்களை கங்கை ஆற்றில் விட போவதாக அறிவித்து பின்னர் விவசாயிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அதனை கைவிட்டனர். இப்படி பல்வேறு வகையில் தங்களது போராட்டங்களை மல்யுத்த வீராங்கனைகள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் டெல்லியைச் சேர்ந்த கிஷான் யூனியன் சார்பில், முசாபர்நகரின் சோரம் கிராமத்தில்  பெண் மல்யுத்த வீரர்கள் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், நடைபெற்று வரும் போராட்டம் குறித்து விவாதித்தனர். மேலும், இன்று  குடியரசு தலைவரை சந்தித்து பாதிக்கப்பட்ட மல்யுத்த வீரர்களுக்கு நீதி கேட்க இருப்பதாகவும், குருக்ஷேத்திரத்தில் கூடுதல் முடிவுகள் எடுக்கப்படும், என்று முன்னணி விவசாய தலைவர்களில் ஒருவரான ராகேஷ் டிகாயிட் அறிவித்தார்.

Published by
கெளதம்

Recent Posts

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…

15 minutes ago

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

2 hours ago

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

3 hours ago

சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…

4 hours ago

காத்திருந்து…காத்திருந்து காலங்கள்… இன்று நடைபெறுமா பெங்களூர் கொல்கத்தா போட்டி?

பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…

4 hours ago

90 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாதனை படைத்த ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா!

மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…

5 hours ago