புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தை விவசாயிகள் நடத்தவுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், தலைநகர் டெல்லியில் போராட்ட நடத்தி வருகின்றனர். மத்திய அரசிற்கும், விவசாயிகள் அமைப்பிற்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், சுமுகமான முடிவுகள் எட்டப்படவில்லை.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என உறுதியாக உள்ளனர். இதையடுத்து, தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தை விவசாயிகள் நடத்தவுள்ளனர். இதனையடுத்து போராட்டம் நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…