போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு தலா ஒரு கோடி வழங்க வேண்டும் என பாஜக எம்பி வருண் காந்தி கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்பி வருண் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மூன்று விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெறும் அறிவிப்பை வரவேற்கிறேன். நமது விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொண்டு அவர்களது வீடுகளுக்குச் செல்லும் வகையில், MSP மற்றும் விவசாயிகளின் இதர பிரச்னைகளுக்கும் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று நான் கோருகிறேன்.
போராட்டத்தின் போது 700 விவசாயிகள் இறந்ததாக பிரதமருக்கு வருண் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். விவசாயச் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான முடிவு விரைவில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இறந்தவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.
போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். லக்கிம்பூர் வன்முறைக் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வருண் காந்தி என கூறினார்.
ஏற்கனவே விவசாயிகள் இயக்கத்திற்கு வருண் காந்தி ஆதரவு அளித்து வருகிறார். விவசாயிகளுக்கு ஆதரவாக பலமுறை அறிக்கைகள் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…