சமீபத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வேளாண் மூன்று மசோதாகளை நிறைவேற்றியது. இந்த மசோதாக்கள், விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகவும், இதனை திரும்பபெறக்கோரி எதிர்க்கட்சியினர் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி கொண்டே வருகின்றனர்.
இந்நிலையில், பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், தனது ட்விட்டர் பக்கத்தில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை “பயங்கரவாதிகள்” என விமர்சித்து இருந்தார். மேலும், அந்த பதிவில், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தவறான தகவலை பரப்பி கலவரத்தை ஏற்படுத்திய நபர்கள், தற்போது வேளாண் சட்டத்திற்கு எதிராகவும் தவறான தகவல்களை பரப்பிக்கொண்டு தேசத்தில் பயங்கரவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றதாகவும், அவர்கள் பயங்கரவாதிகள் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, கர்நாடக மாநிலம், துமகுரு நீதிமன்றத்தில் நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்கறிஞர் எல் ரமேஷ் நாயக் கடந்த மாதம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கங்கனா ரணாவத் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக காவல்துறை கங்கனா கங்கனா ரணாவத் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…