மகாராஷ்டிராவில் தீயாக பரவும் கொரோனா..பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது.!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறைவடைய இருந்த ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக மோடி அறிவித்திருந்தார். இதனிடையே கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 414 ஆகவும் உள்ளது. இந்த கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் 2,916 ஆக இருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் இன்று மேலும் 165 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 3,081 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா கண்டறியப்பட்ட 165 பேரில் 107 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையை 3081 ஆக அதிகரித்துள்ளது என்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 187 ஆக உள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025