விலகும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்..! FIR-ஐ ரத்து செய்ய கோரும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு.!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான என்.சந்திரபாபு நாயுடு . முதல்வராக இருந்த சமயத்தில் திறன் மேம்பாட்டு நிதியில் மோசடியில் ஈடுபட்டதாகவும், இதில் சுமார் 371 கோடி ரூபாய் வரையில் ஊழல் நடைபெற்றதாகவும் குற்ற வழக்கு பதியப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்து சுமார் 16 மாதங்கள் கழித்து தான் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது எப்ஐஆர் பதியப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்காக கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்த்த நிலையில் கடந்த மாதம் (ஜூலை) 8ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
சந்திரபாபு நாயுடு கைது ஆந்திர மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது . தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் சட்டசபை முதல் தெரு வீதிகளை வரை போராடினர். சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்ந்து நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையில் அவர்மீதான ஜாமீன் மனுக்கள் ஆந்திர மாநில உய்ரநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன. மேலும், தன் மீதான எப்ஐஆர் சட்டவிரோதமாக பதியப்பட்டது என கூறி அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தரப்பில் வழக்கு பதியப்பட்டது.
ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் ரத்ததான நிலையில், சந்திரபாபு தரப்பு டெல்லி உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டி தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. ஆனால் இதே திறன் மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் முன்ஜாமீன் கோரி முன்னதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அந்த முன் ஜாமீன் வழக்கு ஏ.எஸ்.ஓகா நீதிபதி அமர்வு முன்னர் விசாரணையில் உள்ளதால், இந்த வழக்கை தாங்கள் விசாரிக்க முடியாது என கூறி நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டி வழக்கு விசாரணையில் இருந்து விலகிவிட்டனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கை யார் விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தன் மீதான எப்ஐஆர் சட்டவிரோதமாக பதியப்பட்டது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்குதல் நடவடிக்கை காரணமாகவும், வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தன்னை செயல்பட விடாமல் தடுக்க ஆளும் கட்சி முயற்சிப்பதாகவும் சந்திரபாபு நாயுடு தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. இந்த வழக்கு விசாரணை அடுத்து வரும் அக்டோபர் 3ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது அன்று தான் சந்திரபாபு நாயுடு எப்ஐஆர் ரத்து செய்ய கோரிய வழக்கை யார் விசாரிப்பார்கள் என தெரியவரும்.