இந்தியா

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கில் காலமானார்..!

Published by
லீனா

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி, கில் 1996 முதல் 2001 வரை தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றினார். 2004 இல் காங்கிரஸில்  இணைந்தார். அவர் தேர்தல் ஆணையராக பதவி வகித்ததற்காக பத்ம விபூஷன் விருது பெற்றுள்ளார்.

இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுத்தியதே அவரது முக்கிய சாதனையாகும். இவர் தேர்தல் ஆணையராக இருந்த போது, 1998 இல் 12வது மக்களவைக்கும் 1999 இல் 13வது மக்களவைக்கும், பொதுத் தேர்தல்களை இந்திய தேர்தல்  ஆணையம் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியது.

காங்கிரஸ் உறுப்பினராக மாநிலங்களவை உறுப்பினரான கில், 2008 இல் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். இந்த நிலையில் கில் உடல்நலக்குறைவு காரணமாக தனது 86 வயதில் காலமானார்.

பாஜக தான் அதிமுக..! அதிமுக தான் பாஜக..! – அமைச்சர் உதயநிதி

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் மனோகர் சிங் கில் உடல்நலக்குறைவு காரணமாக தெற்கு டெல்லி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல்  தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் மத்திய அமைச்சர், பத்ம விபூஷன், ஸ்ரீ மனோகர் சிங் கில் ஜியின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. முன்னதாக ஒரு அரசு ஊழியராகவும், விளையாட்டு, தேர்தல் செயல்முறைகள் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் தேசத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் நீண்ட காலம் நீடித்தன. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.’ என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

41 minutes ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

1 hour ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

1 hour ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

2 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

2 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

3 hours ago