குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முன்னாள் எம்.எல்.ஏ க்கள் இருவர் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.
குஜராத் மாநிலம் பதான் மாவட்டம் ரதான்பூர் பகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் அல்பேஷ் தாக்கூர். காங்கிரஸ் கட்சி உடனான கருத்து மோதலால் தன் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் அணைத்து பொறுப்புகளிலும் இருந்து விலகி கொண்டார்.
கடந்த 5 ம் தேதி அல்பேஷ் தாக்கூர் மற்றும் பேயட் தொகுதி முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தவல் சிங் ஸாஸா இருவரும் குஜராத் மாநில பாஜக துணைத்தலைவர் நிதின் படேலை சந்தித்தனர்.இந்நிலையில் இன்று இருவரும் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.
இதனால் குஜராத் சட்டமன்றத்தில் பாஜக எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸ் 71 ஆக குறைந்துள்ளது.
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…
சென்னை : திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் இன்று அதிகாலை 5:20 மணியளவில் சென்னை துறைமுகத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு எரிபொருள் (டீசல்)…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…