G20 Summit 2023 Delhi [File Image]
வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இந்தியா தலைமையில் ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், விழா ஏற்பாடுகள் என தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஜி-20 மாநாட்டு நடைபெறும் இடத்தின் முகப்பில் பிரம்மாண்ட நடராஜர் சிலை நிறுவப்பட்டு உள்ளது.
இந்த பிரம்மாண்ட நடராஜர் சிலையானது தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், சுவாமிமலையில் இந்த பிரமாண்ட நடராஜர் சிலையானது தயாரிக்கப்பட்டுள்ளது. 28 உயரம் கொண்ட இந்த சிலையானது உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை என கூறப்படுகிறது.
மத்திய அரசின் கலாச்சார துறையின் கீழ் இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. 28 அடி உயரமும் 21 அடி அகலமும் கொண்ட இந்த சிலையானது 18 டன் எடை கொண்டது. செம்பு, பித்தளை , இரும்பு, ஈயம், தங்கம், வெள்ளி, வெள்ளீயம், பாதரசம் என 8 உலோகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர 7 டன் எடையில் சிலையை தாங்கும் பீடம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 28ஆம் தேதி தமிழகத்திலிருந்து டெல்லி சென்றடைந்தது இந்த பிரம்மாண்ட நடராஜர் சிலை.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…