G20 Summit 2023 - Today at Mahatma Gandhi Memorial [Image source : ANI]
உலகமே தற்போது உற்று நோக்கும் வகையில், இந்தியா, 18வது ஜி20 உச்சி மாநாட்டை தலைமை தாங்கி தலைநகர் டெல்லியில் நேற்று முதல் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. நேற்று துவங்கிய இந்த மாநாடு இன்று இன்றும் தொடர்ந்து உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் ஜி20 நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ஒரேபூமி என்ற தலைப்பிலும், ஒரே குடும்பம் என்ற தலைப்பில் 2 கட்டமாக ஆலோசனை நடைபெறுகிறது.
இன்று இரண்டாம் நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஜி20 மாநாடு தலைவர்கள், அனைவரும் டெல்லி ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்றனர். அங்கு மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
அப்போது மகாத்மா காந்திக்கு பிடித்தமான பாடல் ஒலிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து ஜி20 நாடுகளின் தலைவர்கள் பிரகதி மைதானத்தில் மரம் நாட உள்ளனர். இதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி ஜி20 நாட்டு தலைவர்கள் உடன் தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…