ககன்யான் திட்டம் தாமதமாக வாய்ப்பு உள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இந்தியா 2022-ஆம் ஆண்டு விண்வெளிக்கு 4 வீரர்களை அனுப்ப திட்டமிட்டு இதற்கு ககன்யான் என பெயரிடப்பட்டது.இந்த திட்டத்தை இந்தியா சிறப்பாக நிறைவேற்ற ரஷ்யாவும் உதவ முன்வந்தது.இதனால் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இந்திய நிறுவனமான இஸ்ரோ ,ரஷ்ய நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.இந்த நிறுவனம் இந்திய வீரர்கள் 4 பேருக்கும் பயிற்சி அளித்து.தற்போது முதற்கட்ட பயிற்சியை நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில்,விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் தாமதமாக வாய்ப்பு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணிகள் தொய்வடைந்துள்ளது .இதனால் ககன்யான் திட்டம் தாமதமாகலாம்.இதனால் குறித்த காலத்திற்குள் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. “நாங்கள் ஆரம்பத்தில் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இலக்காகக் கொண்டிருந்தோம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…