Punjab gas leak [Image Source : Twitter/@Rahulsinghrath6]
பஞ்சாபில் உள்ள தொழிற்சாலையில் எரிவாயுக் கசிவு ஏற்பட்டதில் 9 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தொழிற்சாலை ஒன்றில் வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. கியாஸ்புரா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
லூதியானாவின் மேற்கு துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் ஸ்வாதி திவானா, இந்த சம்பவம் உண்மையில் வாயு கசிவுதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், இது ஒரு வாயு கசிவு வழக்கு. மக்களை வெளியேற்ற தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார்.
மேலும், இந்த சம்பவத்தில் 9 பேர் இறந்தனர் மற்றும் 11 பேர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வாயுவின் தன்மை பற்றி இன்னும் அறியப்படாததால் மக்கள் தொகை அதிகம் உள்ள இப்பகுதியை காலி செய்வதே உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை என ஸ்வாதி கூறினார்.
இதனைத்தொடர்ந்து, பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் வாயுக்கசிவு சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளதோடு, காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படைகுழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும், இதுதொடர்பான முழுவிவரங்களும் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…