lunar eclipse [Image source : youtube]
மே 5, இன்று புறநிழல் சந்திர கிரகணம் நிகழவுள்ளதாகவும், இந்த கிரகணத்தின் போது, வழக்கத்தைவிட நிலவு கருமையாக காணப்படும் என நாசா தகவல் தெரிவித்துள்ளது. இதனை வெறும் கண்களால் காண முடியும் எனவும், இந்திய நேரப்படி இன்று இரவு 8.44 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 1.01 மணி வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஏப்ரல் 20 ஆம் தேதி தெரிந்த கலப்பின சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து, சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்கோட்டில் சந்திக்கவுள்ளதால் வானத்தில் அடுத்த வானியல் நிகழ்வு (சந்திர கிரகணம்) இன்று இரவு தெரிகிறது.
ஆனால், சந்திரன் பூமியின் பெனும்பிராவில் நுழைந்து வெளியேறுவதால் இந்த கிரகணத்தின் ஆரம்பம் மற்றும் முடிவை நாம் காண முடியாது என்று வானியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புறநிழல் சந்திர கிரகணம்:
முழு நிலவின் போது மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும். பூமியானது சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் துல்லியமாக அமைந்திருக்கும் போது, பூமியின் நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழுகிறது. இது சந்திரனால் பிரதிபலிக்கும் சூரிய ஒளியை மறைக்கிறது. பூமியின் நிழலின் இருண்ட பகுதியான பூமியின் குடை வழியாக சந்திரன் செல்லும் பாரம்பரிய கிரகணத்திலிருந்து இது வேறுபடும் என கூறப்படுகிறது.
எந்தெந்த நாடுகளில் தெரியும்:
தெளிவான வானத்துடன் கூடிய சூழ்நிலையில் இருக்கும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கிரகணம் தெரியும். அதன்படி, இந்த சந்திர கிரகணம் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடன் ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் காணப்படும்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…