மையங்கள் மட்டுமன்றி வீடு, வீடாகவும் சென்று கொரோனா தடுப்பூசி போட வேண்டும்.
இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன்படி, 50%-க்கும் குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்ட 40 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ஜார்க்கண்ட், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநில முதல்வர்களும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி அவர்கள், மையங்கள் மட்டுமன்றி வீடு, வீடாகவும் சென்று கொரோனா தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி தொடர்பாக மக்களிடம் உள்ள குழப்பத்தை உள்ளூர் தலைவர்கள் மூலம் தீர்க்க வேண்டும் என்றும், மாவட்டங்களில் புதுமையான வழிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த வேண்டும் என்றும், 100 கோடி தடுப்பூசி போட்டதால் அலட்சியமாக இருந்தால் புதிய நெருக்கடி வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…