உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக டெல்லி புறப்பட்டார் தமிழக ஆளுநர் ..!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக இன்று டெல்லி கிளம்பியுள்ளார். முன்னதாக மயிலாடுதுறைக்கு ஆளுநர் சென்றிருந்த பொழுது கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்பட்டது.
இதனையடுத்து தற்போது மத்திய அமைச்சரை சந்திப்பதற்காக ஆளுநர் டெல்லி கிளம்பியுள்ளார். இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்லும் ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மட்டுமல்லாமல், ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீட் விலக்கு மசோதா ஒப்புதல் கோரி தொடர்ச்சியாக தமிழக அரசு சார்பில் போராட்டம் வலுத்து வரும் நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025