ஹரியானா மாநிலத்திலுள்ள கர்னால் எனுமிடத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களிலும் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறி இருக்கிறது. ஒரே இடத்தில் அதிகமான ஊழியர்கள் வேலை செய்வதும் இதற்கு காரணமாக அமைகிறது என அறிவுறுத்தப்பட்டு வந்தாலும், தொடர்ந்து அதே போலதான் பல்வேறு இடங்களிலும் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஹரியானா மாநிலத்திலுள்ள கர்னால் எனும் இடத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிவிபத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ள காவல்த்துறையினர், மேலும் வெடி விபத்து குறித்த விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…