உத்தரபிரதேசம் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு குறித்து விளக்கமளிக்க மாநில அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வழக்கு விசாரணையை தாமாக முன்வந்து நீதிபதிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் கடந்த மாதம் 14-ம் தேதி புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது, இளைஞர்கள் 4 பேர் அந்த இளம் பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கடுமையாக தாக்கியும், நாக்கை வெட்டியதாகவும் தெரிகிறது.
பலத்த காயங்களுடன் கடந்த இரண்டு வாரங்களாக அந்த இளம்பெண் உயிருக்கு போராடி வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஹத்ராஸ் சம்பவத்திற்கு பல தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பின்னர், தடை உத்தரவை மீறிச் சென்றதற்காக கூறி இருவரையும் கைது செய்யப்பட்டனர். பிறகு உத்தரபிரதேச காவல்துறையினர் அவர்களை விடுதலை செய்தனர். இதைத்தொடர்ந்து இருவரும் டெல்லிக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு தான் காரணம் இல்லை என்று மல்லை…
வாஷிங்டன் : விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இன்று சுபான்ஷூ சுக்லா குழுவினர் பூமிக்கு…
லார்ட்ஸ் : லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து…
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…