மும்பையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் முடங்கி போய் உள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 7ம் தேதி கேரளாவில் தொடங்கியது. இந்த மழையால் இந்தியாவில் தென்மேற்கு பகுதியில் இருக்கும் மாநிலங்கள் அதிகம் பயனடையும் . தற்போது பருவ மழையானது மும்பையில் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக இடை விடாது மழை பெய்து வருகிறது. நேற்று மட்டும் விடிய விடிய 19 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் நகரின் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாஸ்கர் மாவட்டத்தில் பல இடங்கள் நீரால் சூழப்பட்டுள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் உட்பட பலர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!
July 2, 2025
அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!
July 2, 2025