AmitShah in Jammu [Image Source : Twitter/@AmitShah]
பாட்னா கூட்டத்தில் எத்தனை கட்சிகள் பங்கேற்றாலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய முடியாது என்று அமித்ஷா கூறியுள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, உட்பட 15-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில், ஜம்முவில் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் தொடக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அந்த உரையில், பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தை குறிப்பிட்டு, பாட்னாவில் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது என்று கூறினார்.
மேலும், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒரே மேடையில் ஒன்றிணைந்து பாஜக மற்றும் மோடிக்கு சவால் விடுகின்றனர். இந்த எதிர்கட்சித் தலைவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், எத்தனை கட்சிகள் பங்கேற்றாலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது சாத்தியமற்றது. பிரதமர் மோடி 2024 தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது உறுதி என்று கூறினார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…