இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அடிமையாகி உள்ள ஒரே செயலி டிக்டாக் இந்த செயலியில் பாட்டு பாடி , நடனமாடி தங்களது வீடியோக்களை சிறியவர் முதல் பெரியவர் வரை வெளியிட்டு வருகின்றனர்.இதனால் சிலருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்துள்ளது.
இந்நிலையில் ஆந்திர பிரதேசத்திலுள்ள குண்டூர் மாவட்டத்தில் சார்ந்தவர் சித்தாலா சின்ன நசரையா இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுவர்தா இவர் டிக்டாக் வீடியோ செய்து வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.
இதனால் நசரையா , சுவர்தாவிடம் டிக்டாக் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கூறிஉள்ளார். ஆனால் கணவரின் பேச்சை பொருட்படுத்தாமல் சுவர்தா தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வீட்டை விட்டு வெளியேறி சுவர்தா விடுதியில் தங்கி உள்ளார்.
இதையடுத்து கடந்த நவம்பர் 14-ம் தேதி வீட்டுக்கு வருமாறு நசரையா கூறியுள்ளார். ஆனால் சுவர்தா மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நசரையா, தன் சகோதரர் உடன் சேர்ந்து சுவர்தாவை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவரது உடலை எடுத்து கொண்டு அருகில் இருந்த பொட் லூரு கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் பெட்ரோல் ஊத்தி எரித்ததாக கூறுகின்றன.
சுவர்தா அணிந்திருந்த நகையை வைத்து தான் அவரது உடலை கண்டு பிடித்ததாகவும், மேலும் அருகில் இருந்த பெட்ரோல் பங்க்கில் உள்ள சிசிடிவி காட்சியில் நசரையா பெட்ரோல் வாங்கி கொண்டு சென்றது பதிவாகி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ஐபிசி 322 கீழ் வழக்கு பதிவு செய்து நசரையா மற்றும் அவரது சகோதரரையும் கைது செய்தனர்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…