விசாகப்பட்டினம் : கடந்த 2013-ம் ஆண்டு தேஜா மற்றும் நக்ஷத்ரா இருவரும் திரைத்துறையில் ஒரு வேளை தொடர்பாக சந்திப்பின் போது காதலித்து பின் 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவார்கள். இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.
இந்நிலையில், அவர்களது உறவில் சிறுது சிறிதாக பிளவு ஏற்பட்டுள்ளது. மேலும், நக்ஷத்ர தங்களது உறவில் எந்த ஒரு பெரிய விரிசல் வந்துவிட கூடாதென்று பல முறை தேஜாவை கண்டித்திருக்கிறார்.
ஆனாலும், தேஜா சில புறம்பான விஷயங்களில் ஈடுப்பட்டு வந்ததால் ஆத்திரத்தின் உச்சத்தை இழந்த நக்ஷத்ரா, தேஜா செய்யும் தப்பை ஊடகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்ட முடிவெடுத்துள்ளார்.
இதனால், நக்ஷத்ரா பத்திரிகையாளர்களை தேஜாவின் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கு வேறொரு கம்பெனியில் பணிபுரியும் ஒரு பெண்ணுடன் தேஜா நெருக்கமாக இருந்துள்ளார். அதனை பத்திரிகையாளர்கள் படம் பிடிக்க தொடங்கியுள்ளனர்.
அங்கு கையும் களவுமாக சிக்கிய தேஜாவை கண்ட நக்ஷத்ரா கோபமடைந்து பத்திரிகையாளர்கள் முன்னிலே அழுதுகொண்டே தேஜாவின் முகத்தில் பொருளை தூக்கி எரிந்தும், அவரை தாக்கவும் செய்திருக்கிறார்.
தேஜாவும் பதிலுக்கு நக்ஷத்ராவை தாக்கியுள்ளார் அதுவும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. இதனை குறித்து தேஜாவிடம் கேட்ட பொழுது, நக்ஷத்ராவும் அவரது குடும்பத்தினரும் தன் மீது வேண்டுமென்றே குறை கூறுவதாகவும் தன மீது எந்த தவறும் இல்லை என்றும் மறுத்துள்ளார்.
மேலும், அந்த பெண்ணை குறித்து கேள்வி கேட்கும் போது, அவர் தனது கம்பெனியில் பணிபுரியும் பெண் எனவும் ஒரு திரைப்படத் திட்டத்தைப் பற்றி விவாதிக்கவே இங்கு வந்தோம் எனவும் கூறி இருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. மேலும், இந்த தம்பதியினரின் விவாகரத்து வழக்கு கடந்த 2021-ம் ஆண்டு முதல் குடும்ப நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கிடைத்த தகவலின் படி காவல் துறையினர் கூறி உள்ளனர்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…