ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் – பிரதமர் மோடி உரை.!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியா முழுவதும் ஊடரங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில்  பிரதமர் மோடி அவர்கள்  இன்று ‘மன் கி பாத்’  என்ற மனதின் குரல் என்னும் நிகழ்ச்சியில் வானொலி மூலமாக உரையாற்றினார்.  அப்போது கொரோனாவுக்கு எதிரான இந்த யுத்தத்தில் நமக்கு இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் தேவை என்றும் வீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை என மோடி தெரிவித்துள்ளார். 

கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்றும் உங்களில் பலருக்கு என் மீது கோபமும் இருக்கலாம் என தெரிவித்தார். கொரோனாவுக்கு எதிரான போரில், மக்களுக்காக சேவை செய்பவர்கள் ஹீரோக்கள் என்று குறிப்பிட்டார். சட்டத்தை, உத்தரவுகளை மீறுவது பலருக்கு ஆபத்தை விளைவிக்கும் மோடி எச்சரித்துள்ளார். தொடர்ந்து பேசிய மோடி, மத்திய அரசின் நடவடிக்கையால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. லாக்டவுன் என்பது நீங்களே உங்களைப் பாதுகாத்துக் கொள்கிற நடவடிக்கை. நீங்கள் இந்த பொறுமையை இன்னும் பல நாட்களுக்கு வெளிப்படுத்த நேரிடலாம். கொரோனாவில் இருந்து பாதுகாக்க லாக்டவுன் தான் வழி என்றும் இதனை சிலர் புரிந்து கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டார். பின்னர் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் நிச்சயம் நாம் வெல்வோம். லாக்டவுன் என்பது கடுமையான முடிவாக இருந்தாலும் நமக்கு வேறு வழியே இல்லாமல் இருக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் லாக்டவுனை பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…

1 minute ago

உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

34 minutes ago

+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..

சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…

34 minutes ago

என்னோட தலையீட்டால் தான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டது – மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…

1 hour ago

எடப்பாடி பழனிசாமி வேலையே பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் – முதல்வர் ஸ்டாலின் சாடல்!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

18 hours ago