Priyanka Gandhi - Priyanka Chaturvedi [File Image]
சிவசேனா (யுபிடி) தலைவரும் எம்பியுமான பிரியங்கா சதுர்வேதி, பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட முடிவு செய்தால் எதிர்க்கட்சி கூட்டணி அவருக்கு ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதற்கு, பிரியங்கா காந்தி வெற்றிபெறச் செய்ய எதிர்க்கட்சி கூட்டணி ஒத்துழைக்கும் என்று, சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
லோக்சபா தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் எப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறித்து பேசிய சிவசேனா எம்பி, அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுடனான சந்திப்பின் போது, எந்த தொகுதிக்கு யார் பொருத்தமானவர் என்பதை நாங்கள் முடிவு செய்வோம் என்றார்.
எதிர்க்கட்சி கூட்டணியால் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் அதிர்ந்து போனதால், நாடாளுமன்றம் முதல் செங்கோட்டை வரை எதிர்க்கட்சி கூட்டணியை விமர்சித்து வருவதாக கூறியுள்ளார்.
முன்னதாக, உத்தரபிரதேசம் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அஜய் ராய் கூறுகையில், ராகுல் காந்தி 2024 மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் அமேதியில் போட்டியிடுவார் என்று கூறினார்.
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…