உத்தர பிரதேச மாநிலத்தில் பசுக்கொலையில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நேற்று அம்மாநிலத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பசு வதை தடுப்பு அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த அவசர சட்டம் தற்போது உள்ள தடுப்பு சட்டம் அதாவது, உத்தர பிரதேச பசு வதை தடுப்பு சட்டம், 1955-ஐ விட மிகவும் வலுவானதாகவும், பயனுள்ளதாகவும் மாற்றுவதையும் அம்மாநில அரசு தெரிவித்தது.
மேலும், பசு வதை தொடர்பான சம்பவங்கள் முற்றிலுமாக நிறுத்துவதையும் நோக்கமாக இந்த சட்டம் கொண்டுள்ளது என அம்மாநில அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, முதல் முறையாக பசு கொலையில் ஈடுபடுபவருக்கு 1 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், இரண்டாவது முறை செய்தால் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை மற்றும் ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தது.
அதேபோலவே, பசுக்களை சட்டவிரோதமாக வாகனத்தில் கொண்டு சென்றால் புதிய சட்டத்தின்கீழ், வாகன ஓட்டுநர், உடனிருந்தனர் மற்றும் வாகன உரிமையாளர் ஆகியவரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவித்த அரசு, பசுவிற்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நபர் ஒரு ஆண்டு கடுமையான சிறைத்தண்டனை வழங்கப்படலாம். அதுமட்டுமின்றி, அந்த சிறை தண்டனையை, 7 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம் எனவும் தெரிவித்தது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…