இரு நாடுகளின் குடியுரிமை இருந்தால் எப்படி தேசபக்தி இருக்கும் – ராகுலை சாடிய பிரக்யா சிங்

Published by
Venu

இரு நாடுகளின் குடியுரிமை இருந்தால் எப்படி தேசபக்தியை வெளிப்படுத்துவீர்கள் என்று ராகுல் குறித்து பேசியுள்ளார் பாஜகவின் பிரக்யா சிங் தாகூர்.

இந்திய சீனா எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைபகுதியில், இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக போர்பதற்றம் நிலவி வருகிறது. இதனிடையே லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்தனர்.இதனையடுத்து இரு நாடுகளும் பிரச்சினையை தீர்க்க முயற்சி மேற்கொண்டு வருகின்றது.

ஆனால் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறது.குறிப்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ,20  இந்திய ராணுவ வீரர்கள் பலியானதற்கு யார் பொறுப்பு? வீரர்களை ஆயுதமின்றி அனுப்பியது யார்?  என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

இந்நிலையில் சீன விவகாரத்தில் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர் கூறுகையில்,தாய் மண்ணில் பிறந்தவனால்தான் தாய்  நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று சாணக்யா கூறினார். அப்படிப் பார்த்தால், வெளிநாட்டுப் பெண்ணிற்குப் பிறந்தவர் எப்படி தேசபக்தராக இருக்க முடியும். இரு நாடுகளின் குடியுரிமை இருந்தால் எப்படி தேசபக்தியை வெளிப்படுத்துவீர்கள் என்று ராகுலை சாடி பேசியுள்ளார்.

Published by
Venu

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

2 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

3 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

4 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

4 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

6 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

7 hours ago